Page Nav

HIDE

Breaking News:

latest

(PHOTOS)இலங்கையின் 78 வது சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் - பிரித்தானியாவில் போராட்டம் முன்னெடுப்பு.

இலங்கையின் 78 வது சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என கூறி வடக்கு  கிழக்கில்   மா பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்ட நிலையில்   பிரித்...

இலங்கையின் 78 வது சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என கூறி வடக்கு  கிழக்கில்   மா பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்ட நிலையில்   பிரித்தானியாவிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு   வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களில் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என கூறி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட நிலையில், பிரித்தானியாவிலும்  போராட்டம்   முன்னெடுக்கப்பட்டுள்ளது .
தமிழர்களின் தன்னாட்சிக்கான உரிமைக் குரலாகவும், இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என்பதை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்  கரியாலயம் முன்பாக   இந்தப் போராட்டம் ஆரம்பமாகி பேரணியாக  பாராளுமன்றம் வரை சென்று நிறைவடைந்தது  .
இதில் லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள், லண்டன் மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், தமிழர்களின் அரசியல் உரிமைகள், தன்னாட்சி, மனித உரிமை மீறல்கள் குறித்த கோஷங்கள் எழுப்பப்பட்டது டன், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

No comments

hill